நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...

Monday, August 24, 2009

MGR INTERVIEW IN CEYLON RADIO ON I-03-1958

TO LISTEN MGR's INTERVIEW IN CEYLON RADIO CLICK BELOW LINK

http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3

[நன்றி-'நேயர் திலகம்' விஜயராம் ஏ.கண்ணன்,
14, தாயுமானவர் தெரு,
ஆத்தூர் 636102.]

LINK

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

Wednesday, March 25, 2009

எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு-PART-2

TO LISTEN CEYLON RADIO S.P.MAYILVAGANAN'S VOICE [PART-2]

CLICK THIS LINK

[நன்றி-'நேயர் திலகம்' விஜயராம் ஏ.கண்ணன்,
14, தாயுமானவர் தெரு,
ஆத்தூர் 636102.]




திருமதி செந்திமணி மயில்வாகனன் அவர்கள் இம்மாதம் 23ஆம் தேதி லண்டனில் காலமானார்.

அன்னார், `தினகரன்’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர், காலஞ்சென்ற இராமநாதன் தம்பதியரின் அன்பு மகளும்;

காலஞ்சென்ற, இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனனின் அன்பு மனைவியும்;

ரமணன், யசோதா, சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்;

மிலி, இந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்; குயலந அனுஷா, நீலன், சோபனா, சுகன்யா, ஆரணி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்;

கொழும்பு சைவமங்கையர் கழக முன்னாள் துணை அதிபர், காலஞ்சென்ற செந்திசெல்வம் இரத்தினாதிக்கம், காலஞ்சென்ற செந்திராஜா ஆகியோரின் அன்புச சகோதரியும்;

கண்மணி பாலசுப்பிரமணியத்தின் அன்பு மைத்துனியும்; காலஞ்சென்ற
சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு , Manor Park, City of London Crematorium அஞ்சலி கூடத்தில் நடைபெற்று, காலை 11.00 மணிக்கு
பூதவுடல் தகனம் செயப்படும்.

தகவல்: பிள்ளைகள்

தொலைபேசி: 07736299792

49 Naseby Road, Clayhall, Ilford, Essex IG5 0NN

Friday, February 20, 2009

இலங்கை வானொலியில் எடுத்த மண்ணை பூஜையறையில் பாதுகாக்கும் ஆத்தூர் நேயர்

இலங்கை வானொலியின் மீது பித்துப் பிடித்த
ஆத்தூர் கண்ணனின் முத்துப் பேட்டி.


கட்டுரையைப் பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...
அதன் மேலே ஒரு தடவை அழுத்துங்கள்.




நன்றி - 'சர்வதேச வானொலி'

[ஆசிரியர்- தங்க ஜெய்சக்திவேல்]

Thursday, September 18, 2008

ஆனந்த அலை....



'தென்றலும் புயலும்'....

இந்தக் கடிதத்தை எழுதிய ஜனார்த்தனன் என்கின்ற ஜனாவை 31 வருடமாக நான் தேடிக் கொண்டிருந்தேன்.அதாவது கந்தர்மடம் பலாலி ரோடில் நான் வசித்த 1977 இலிருந்து...

1990 இல் சென்னையில் 'பொம்மை' பத்திரிகையில் நான் உதவி ஆசிரியராக பணியாற்றிய போது, பொம்மையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்த போது...மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.

எனது மண்ணைச் சேர்ந்த இந்த ஜனா இப்போது எங்கே இருப்பார்?..எப்படி இருப்பார்?..என்று யோசித்தேன்.

ஒரு தடவை அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அவர் எங்கிருப்பார் என்பது தெரியவில்லை.
பின்பு காலச் சுழலில் இதை மறந்து விட்டேன்.


இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் , சென்னை நண்பர் ராஜேந்திர உடையார்... லண்டன் வானொலி அறிவிப்பாளர் என்ற முறையில் ஜனாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த போது கூட 31 வருடமாக நான் தேடிக் கொண்டிருக்கும் அந்த ஜனா தான்... இந்த ஜனா என்று எனக்குத் தெரியாது.

நம் இருவரின் உரையாடல்களின் மத்தியில் தற்செயலாக நான் 'பொம்மை'யில் பணியாற்றியது பற்றிக் கூறப் போக, ஜனா 31 வருடத்திற்கு முன்பு அதில் கமலுக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி சொல்லப் போக...என்னால் நம்ப முடியவில்லை.அதிர்ச்சி!....ஆனந்த அலை...

லண்டன் திரும்பியதும் மறக்காமல் 'பொம்மை'யில் தாம் எழுதிய கடிதத்தின் பிரதியை உடனே எனக்கு அனுப்பி வைத்தார்.

ஊர் திரும்பியதும் அவர் வழங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே என்னைச் சந்தித்த அனுபவங்களை... ஒரு ஆத்மார்த்தமான நண்பனை நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த போது கிடைக்கும் பரவசத்தோடு பகிர்ந்து கொண்டார்.

'இது தான்... விட்ட குறை தொட்ட குறையோ...' என்று அவர் ஒலி வாங்கியில் சொல்லிக் கொண்டிருந்த போது...எனது கண்களில் ஈரம்.
நான் அழுகின்றேனா?


லண்டன் தமிழ் வானொலியில் ஜனா..எனது சந்திப்புப் பற்றிக் கூறியதை செவி மடுக்க இங்கே அழுத்துங்கள்.

அறிவிப்பாளர் ஜனா கமலுக்கு எழுதிய கடிதமும் கமலின் பதிலும்...


அன்புள்ள சுதாகர் அவர்களுக்கு,

உண்மையில் அன்றைய சந்திப்பில் நான் உங்களிடமும், திரு. ஜனா அவர்களிடமும் செவ்வி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் உங்களைச்சந்தித்த பின்னும், நீங்கள் இருவரும் அளவளாவிய போதும், நான் மெய் மறந்து அந்த இரண்டு மணி நேரத்தையும் உங்கள் உரையாடலை கவனிப்பதிலேயே செலவழித்துவிட்டேன்.

அந்த உரையாடல் உண்மையில் ஒரு கலைப்பொக்கிஷம் எனில் அது மிகையல்ல!

அங்கே பரிமாறப்பட்ட செய்திகளும், பகிர்ந்து கொண்ட நினைவலைகளும் ஒரு வரலாற்று ஆவணமாகப் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. நிச்சயம் பாதுகாப்பேன்!

இப்பொழுதும் நேரம் அனுமதிக்கும் போது அந்த உரையாடலை செவிமடுக்கத்தவறுவதில்லை...

உங்
கள் சந்திப்பில் என் பங்கு அணில் பங்கு போலத்தான்..ஆயினும் என்னை இங்கே நினைவு கூர்ந்திருப்பது உங்களின் உயர்ந்த உள்ளத்தை பறைசாற்றுகிறது..

மிக்க நன்றியுடன்..

அன்பன்,

இராசேந்திர உடையார்.

Wednesday, September 17, 2008

அறிவிப்பாளர் ஜனா கமலுக்கு எழுதிய கடிதமும் கமலின் பதிலும்



'லண்டன் தமிழ் வானொலி' புகழ் ஒலிபரப்பாளர் ஜனா... 31 ஆண்டுகளுக்கு முன்பு கமலுக்கு எழுதிய கடிதம். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து எழுதிய கடிதம்.
1977 'பொம்மை' சஞ்சிகையில் பிரசுரமானது.
நடு நிலையான ஜனாவின் விமர்சனக் கடிதத்திற்கு கமல் எழுதிய மனம் திறந்த பதிலையும் படிக்கலாம்.

'நடிகர் திலகத்தின் வாரிசாக கமல் வர வேண்டும்... உயர வேண்டும்...' என்று 31 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன 'ஜனாவின் தீர்க்க தரிசனம்' சிலிர்க்க வைக்கிறது. - யாழ் சுதாகர்

கடிதத்தை தெளிவாகப் படிக்க...ஒவ்வொரு கடிதத்தின் மீதும் மவுசினால் ஒரு முறை அழுத்துங்கள்.


Wednesday, April 23, 2008

ஐரோப்பிய தமிழ் வானொலி பற்றிய வீரகேசரி சிறப்புக் கட்டுரை


Saturday, October 27, 2007

எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு...

அமரர் எஸ்.பி மயில்வாகனனின் குரலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.


இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலி பரப்பில் தமது கம்பீரமான குரலால் உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான தமிழர்களையெல்லாம் ஈர்த்தவர் அறிவிப்பாளர் அமரர் எஸ்.பி.மயில்வாகனன் அவர்கள்.

1954 இல் இலங்கை வானொலியில் பணியாற்றத் துவங்கிய இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியில் ஆற்றிய பணிகளும்...நிகழ்த்திய சாதனைகளும் இன்றுவரை எவராலும் நெருங்க முடியாதவை.

இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்தியாவில் பட்டி தொட்டியெங்கும் இவர் புகழ்... பிரபல சினிமாக் கதாநாயகர்களுக்கு இணையாகப் பரவியது.

இவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தக் காலத்திலே லட்சக்கணக்கான நேயர்கள் துடித்திருக்கிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர்கள்,பாடகர்கள், பாடகிகள் மட்டுமன்றி அந்தக் காலத்தின் முன்னணிக் கதா நாயகர்கள் பலரும் எஸ்.பி.மயில்வாகனனின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள் என்பதை பழைய பத்திரிகைச் செய்திகளின் மூலம் அறிந்து வியக்க முடிகிறது.

1950 களிலும்...1960 களிலும் இவரது அறிவிப்பினால் அடையாளம் காட்டப்பட்டு புகழ் பெற்ற பாடல்கள் அதிகம்.பாடகர்கள்,இசையமைப்பாளர்கள் அதிகம்.

மயில்வாகனனின் புகைப் படத்தை ஒவ்வொரு இசையமைப்பாளனும்..பாடகனும்...தமது இல்லத்தில் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என ...அந்தக் காலத்தின் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.


LINKS

A TRIBUTE TO S.P.MYLVANAN AND K.S.RAJA BY Yazh Sudhakar-Part-1

A TRIBUTE TO S.P.MYLVANAM AND K.S.RAJA BY Yazh Sudhakar-Part-2


Dear Mr. Yaazh Suthakar,


When I was talking to one of friends yesterday over phone, we had an opportunity to talk about Mr. Mylvahanan.


At once, I visited Mr. Mylvahanan's website posted by you. I have downloaded his image and his voice into my iPod and have been hearing his voice 5/6 times daily.


I had admired the voice of Mr. Mylvahanan and Mrs. Rajeswari Shanmugam of Radio Ceylon during 50s and 60s. Especially, the way of conducting the programme by Mr. Mylvahanan was wonderful. His voice is a God's gift. I had been longing to hear his voice in the Radio Ceylon during my earlier years.


His ads about T.P. Chokkalal Ramsait Beedi and Santhosa Nadar are still echoing in my ears. Both Mr. Mylvahanan and Mrs. Rajeswari Shanmugam’s programmes like Jodi Maatram, Neyar Viruppam, En Viruppam, Andrum Indrum, etc. were wonderful.


I shall be much obliged if you will please capture his earlier years' voice and put it on to the website.


His programmes were amazing. Nobody can ever conduct programmes like that.


I thank you very much for this wonderful presentation by you especially his photo and voice. I have to frame his photo in a big size and will keep it in my hall.


Are you able to post any of his other photos into the website?


Please continue your services for Mr. Mylvahanan's fans like me.


May his soul rest in peace


I also thank you for providing the photos of Mr. T.M. Soundararajan all of which have been downloaded by me and put on to my iPod.


Sir, can you provide photos of Ezhisai Mannan MKT, Sangeethan Chakravarthy G. Ramanathan, Tamil Thiagarayar Papanasam Sivan, etc. in the website?


Thanks and regards,


S. RAMAMOORTHY


Chennai - 600 116.